வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 16 மே, 2012

கனடாவுக்கு சட்டவிரோதமாக கப்பலை கொண்டு சென்றதாக எம்.வி.சன் ஸீ உரிமையாளர் மீது குற்றச்சாட்டு



492 தமிழர்களை கனாடவுக்கு கொண்டு சென்ற சன் ஸீ கப்பலை வாங்கியதாக கூறப்படும் நபர்மீது, அந்த கப்பலை சட்டவிரோதமாக கனாடவுக்கு கொண்டு சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த பழைய கப்பலில் பயணித்த மற்றுமொருவர் மீதும் இதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குணறொபின்ஸன் கிறிஸ்துராஜா மற்றும் லெஸ்லி ஜனா இமானுவல் ஆகியோர் மீது குடிவரவு மற்றும் அகதி சட்டங்களை மீறி கனடாவுக்கு ஆட்களை கொண்டுவர ஒழுங்கு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என கனடா பொலிஸார் செவ்வாய்கிழமை கூறினர். இவர்கள் இருவரும் இன்று புதன்கிழமை வான்கூவா மாகாண நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர் என அவர்கள் கூறினர். இதே குற்றச்சாட்டு தயாகரன் மார்க்கண்டு என்பவர் மீதும் மார்ச் மாத்தத்தில் சுமத்தப்பட்டது. கடந்த மாதம் பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இவரை கனாடவுக்கு கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’