வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 1 மே, 2012

சாந்தன், முருகன், பேரறிவாளனின் மனு மீதான விசாரணை சென்னையிலிருந்து இந்திய உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்



ந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் தமக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஆட்சேபம் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றில் (மேல் நீதிமன்றில்) தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு (உயர்நீதிமன்றம்) இன்று மாற்றப்பட்டது.
தமது கருணை மனுக்களை இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் 11 வருடங்களின் பின்னர் நிராகரித்தமைக்கு எதிராக மேற்படி மூவரும் கடந்த வருடம் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சென்னை மேல் நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சென்னையில் தற்போது நிலவும் சூழ்நிலையானது இவ்வழக்கில் முறையான விசாரணைக்கு இடமளிக்காது எனத் தெரிவித்து, இவ்விசாரணையை உயர் நீதிமன்றுக்கு மாற்றுமாறு சட்டத்தரணி கே.எல். சிங்வி மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதையடுத்து எஸ்.எஸ்.சிங்வி தலைமையிலான உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட மூவரினதும் மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’