பிரிட்டனில் தனது 83 வயதில் சிறுநீரகத்தை தானம் செய்ததன் மூலம் பிரிட்டிஷ் மருத்துவ உலகில் நிக்கோலஸ் கிரேஷ் என்பவர் ஒரு சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
தனது மனைவி இறந்தது முதல் தனது சிறுநீரகத்தை தானம் செய்வதற்கான யோசனை குறித்து தான் ஆராய்ந்துவந்ததாக நிக்கோலஸ் கிரேஷ் கூறியுள்ளார். அவரது சிறுநீரகம் 40 வயதுக்காரர் ஒருவரது சிறுநீரகத்தைப் போல வேலை செய்ததை கண்டுபிடித்த பின்னர் டாக்டர்கள் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர். இந்த வயதான காலத்திலும் அடுத்தவருக்கு உதவியாக இருப்பது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாக கிரேஷ் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’