வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

'எல்.ரி.ரி.ஈ. சார்பு புலம்பெயர்ந்தோருடன் தொடர்புள்ளதா என விசாரித்தனர்'


புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள முன்னிலை சோஷலிச கட்சியின் சர்வதேச அணியின் தலைவியான திமுது ஆட்டிகல, தன்னைக் கடத்தியதில் அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறினர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொடகமையிலுள்ள தனது வீட்டுக்கு அருகாமையில் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டை நெருங்கிய போது வீட்டுக்கு அருகாமையில் ஒரு வெள்ளை வான் நின்றதை தான் கண்டதாக அவர் கூறினார். திரும்பி ஓட முற்பட்ட போதிலும் பின்னால் இரண்டு பேர் வந்ததால் தன்னால் தப்பியோட முடியாமல் போனது. வானிலிருந்து வெளியே வந்த இரண்டு பலசாலிகளான ஆண்கள் தன்னை வானுக்குள் தூக்கிப் போட்டு வாயைப் பொத்திப் பிடித்ததாக அவர் குறிப்பிட்டார். தன்னைக் கடத்தியவர்களிடமிருந்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் விடுபட்டு ஒரு மணித்தியாலத்தின் பின் ஊடகவியலாளர்களைச் சந்தித்த திமுது ஆட்டிகல, மேற்படி தகவலை தெரிவித்தார். விடுவிக்கப்பட்ட திமுது ஆட்டிகல, மடவிலவிலுள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்றபோது அங்கு பத்திரிகையாளர் மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. குறித்த மாநாடு சுமார் 15 நிமிடங்கள் வரை நிறுத்தப்பட்டு ஆரம்பித்த போதே திமுதுவும் அதில் கலந்துகொண்டார். 'கடத்திச் சென்றவர்கள், கட்சியின் சர்வதேச தொடர்புகள் பற்றியும் தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பு புலம்பெயர்ந்தோருடன் தொடர்புகள் உண்டா?' என கேட்டதாக திமுது கூறினார். கட்சிக்கு இத்தகைய தொடர்பு இல்லை என தான் அவர்களிடம் கூறியதாகவும் கட்சியின் சர்வதேச நிதி மூலங்களைப்பற்றி அறிய அவர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர் என்றும் திமுது கூறினார். அவரது குரலில் பயமும் நடுக்கமும் தொடர்ந்தும் காணப்பட்டது. 'கடத்தல்காரரின் ஆயுதங்கள், மொழிப் பிரயோகம், தடுத்துவைக்கப்பட்ட இடம் என்பன அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு இக்கடத்தலிலிருந்த தொடர்பை வெளிப்படுத்தியதாக அவர் கூறினார். வாகனத்தில் ரி – 56 ரக துப்பாக்கிகளும் பல வாகன இலக்கத் தகடுகளும் பிஸ்டல்களம் இருந்தனஇ அவர்கள் தமது அதிகாரிகளை 'சேர்' என அழைத்தனர் என அவர் கூறினார். தன்னை கடத்தியவர்கள் ஜே.வி.பி.யை புகழ்ந்து பேசியதாக கூறியபோது அவ்விடத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. "ஜே.வி.பி.க்கு துரோகம் செய்தமையால்தான் நான் துன்பப்படுவதாக அவர்கள் கூறினர். சிலர் ஜே.வி.பி.யை நல்லதொரு அரசியல் கட்சியென கூறினர். கொள்கை வேறுபாடுகள் காரணமாகவே நாம் பிரிந்தோம் என அவர்களுக்கு நான் கூறினேன். நாம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடமாட்டோம் என உறுதியளித்தேன். கடத்தப்பட்ட குணரத்தினத்தின் முன் என்னை ஒரு முறை அழைத்துச் சென்றனர் என்று கூறிய திமுதுவிடம் ஜே.வி.பி.க்கு இதில் தொடர்பு உள்ளதென சந்தேகப்படுகிறீர்களா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், 'என்னால் முடிவாக எதுவும் கூற முடியாது. ஆயினும் கடத்தியவர்களின் பேச்சிலிருந்து ஜே.வி.பி.க்கு தொடர்பு இருக்கலாமோ என சந்தேகிக்கின்றேன்" என கூறினார். தான் தடுத்து வைக்கப்பட்ட போது தனக்கு உணவு வழங்கப்பட்டதாகவும் தனக்கு உதவிக்காக ஒரு பெண் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’