சதுரங்கப் போட்டியில் யாழ் மாவட்டத்தில் இருந்து தேசிய ரீதியிலான போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்ட யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவி செல்வி சுமித்திரா உலகநாதனுக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளதுடன் பணப்பரிசிலும் வழங்கிக் கௌரவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பில் அமைந்துள்ள அமைச்சரின் வாசஸ்தலத்திற்கு தனது பெற்றோர் சகிதம் இன்றைய தினம் (5) வருகை தந்திருந்த செல்வி சுமித்திராவை அமைச்சர் அவர்கள் கௌரவித்துள்ளார். யாழ் இந்து மகளிர் கல்லூரியில் தரம் 9ல் கல்வி பயிலும் இம்மாணவி மாவட்ட மட்டத்தில் நடாத்தப்பட்ட சதுரங்கப் போட்டியில் இவ்வாண்டுக்கான 14 வயதுக்குட்பட்ட பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமைக்கான மாவட்ட விளையாட்டு அதிகாரியால் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். இதனிடையே 6ம் 7ம் 8ம் திகதிகளில் கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெறவுள்ள சேசிய மட்டப் போட்டியில் இம்மாணவி பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’