ரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது இரிசின் எனப்படும் திரவம். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமன் ஏற்படாமலும் தடுக்கிறது.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதோ, குறைவதோ நீரிழிவு நோய்க்கு அடிப்படை காரணமாகிறது. நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அதனை குறைக்க வகை செய்யும் (ஹார்மோன்) நாளமில்லா சுரப்புத் திரவம் ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து மட்டுமே தீர்வாக உள்ளது. இந்நிலையில் முறையான உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் உடலியல் மாற்றங்களைத் தூண்டும் இரிசின் எனப்படும் நாளமில்லா சுரப்புத் திரவம் உடம்பிலுள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து விடுவதன் மூலம்உடல் பருமனையும், நீரிழிவு நோயையும் தடுக்கிறது என்று சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நாளமிள்ளா சுரப்புத் திரவத்தை எலிகளுக்கு சோதனை முறையில் செயற்கையாகச் செலுத்திப் பார்த்ததில் உடல் பருமனுக்கும் நீரிழிவுக்கும் மருந்தாவது காணப்பட்டது. மனிதர்களிடத்தும் இச்சோதனை வெற்றியடையும் என்றும் விரைவில் இன்சுலினுக்கு மாற்றாக இத்திரவத்தை ரத்தத்தில் செலுத்துவதன் மூலம் நீரிழிவு குறைபாட்டைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடமுடியும் என்றும் டானா-ஃபார்பர் புற்றுநோய் மைய விஞ்ஞானி ப்ரூஸ் ஸ்பைகில்மென் கூறியுள்ளார். இந்த ஆய்வு முடிவு குறித்து அமெரிக்காவில் வெளியாகும் மருத்துவ நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிற நிலையில்,இக்கண்டுபிடிப்புமுக்கியத்துவம் பெறுகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’