வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 28 ஏப்ரல், 2012

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக தேவையேற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்



ட்சியின் அரசியல் பிரிவுத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கத்திடமிருந்து விளக்கம் கோரப்படும் என்றும் தேவையேற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரெலோ கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செயலாளர் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 26.04.2012 அன்று தந்தை செல்வாவின் 35 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் தந்தை செல்வா நினைவு அரங்காவல் குழுவினரால் ஏற்பாடு செய்திருந்த நிலையில் குறித்த நிகழ்வில் திரு.சிவாஜிலிங்கம் அவர்கள் நடந்து கொண்ட முறை தமிழீழ விடுதலை இயக்கத்தவர்களாகிய எங்களுக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24.04.2012 அன்று பத்திரிகை வாயிலாக தந்தை செல்வா நினைவு நிகழ்வில் கலந்து கொள்ளும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.இராசதுரைக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டப் போவதாக திரு.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இது சம்பந்தமாக கட்சியின் முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்தில் கூடி திரு.சிவாஜிலிங்கம் அவர்களிடம் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தி இருந்தார்கள். இவற்றை சிவாஜிலிங்கம் ஏற்றுக்கொண்டிருந்தார். இவற்றுக்குப் பின் கட்சியின் கூட்டுப் பொறுப்பையும் மீறி தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை இவருடைய தனிப்பட்டதே தவிர கட்சிக்கும் இந்த நடவடிக்கைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை குறிப்பிடுவதோடு இந்த விடயம் சம்பந்தமாக இவரிடம் இருந்து விளக்கம் கோர இருப்பதோடு தேவை ஏற்படும் பட்சத்தில் இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விரும்பத்தகாத செயல் நடந்தமைக்காக தாங்கள் சம்பந்தப்பட்ட அரங்காவல் குழுவினரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’