இராகம வைத்தியசாலையைச் சேர்ந்த பல் வைத்தியரொருவர் நேற்று புதன்கிழமை பெண்ணொருவரை பாலியல் தொந்தரவுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தலுகம பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையிலிருந்த இவ்வைத்தியர், அப்பெண்ணை நேற்று புதன்கிழமை இரவு 8 மணிக்கு வைத்தியசாலைக்கு வருமாறு கூறி அவரை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியுள்ளார். சுமார் ஒரு மணித்தியாலமாக இவ்வைத்தியர் அப்பெண்ணை பாலியல் தொந்தரவுக்குட்படுத்தியுள்ளார். அறையிலிருந்து தப்பிவந்த அப்பெண் கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து குறித்த வைத்தியர் கைதுசெய்யப்பட்டார். இவ் வைத்தியர் இன்று வியாழக்கிழமை காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’