வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 11 ஏப்ரல், 2012

உடல், பாலியல் ரீதியாக சித்திரவதை செய்யப்பட்டேன்: குமார் குணரட்ணம்


வுஸ்திரேலிய அரசாங்கம் தலையிடாவிட்டால் தான் மரணத்தை எதிர்நோக்கியிருப்பார் என முன்னிலை சோசலிஷக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணம் கூறியுள்ளார்.
42 வயதான குணரட்ணம் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் அவர் பொலிஸாரிடம் சரணடைந்தாக அரசாங்கம் அறிவித்தது. விஸா காலவதியான நிலையில் தங்கியிருந்ததாக குற்றச்சாட்டின் பேரில் அவர் நேற்றுகாலை அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிட்னியிலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்திய அவர், தான் கடத்தப்பட்டதாகவும் தனது கைவிலங்கிடப்பட்டு, கண்கள் கட்டப்பட்டிருந்ததாகவும் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். "அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவு எனக்கிருக்காவிட்டால் எனது சகோதரர் மற்றும் நூற்றுக்கணக்கான அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்று நான் கொல்ப்பட்டிருப்பேன் என்பதில் சந்தேகம் இல்லை" எனஅவர் கூறினார். என அவர் கூறியதாக அவுஸ்திரேலியாவின் 'தி ஏஜ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. குணரட்ணம் தனது நாட்டில் இருப்பது தெரியாதென முதலில் கூறிய, அவர் கண்டுபிடிக்கப்பட்டபின்னர், அவர் காணாமல் போனதில் தனக்கு பங்கில்லை என கூறிய இலங்கை அரசாங்கத்தின் மீது அவரின் தகவல் அழுத்தத்தை ஏற்படுத்தும் எனவும் அப்பத்தரிகை குறிப்பிட்டுள்ளது. 'இலங்கை அரசாங்கம் அந்நபரை ஒருபோதும் கைது செய்யவில்லை' என கான்பராவிலுள்ள இலங்கை உயர்ஸதானிகர் அட்மிரல் திசேரா சமரசிங்க செவ்வாய்க்கிழமை பெயார்பெக்ஸ் மீடியாவுக்குத் தெரிவித்தார். அதை மறுத்த குணரட்ணம், "அரசாங்கப் படைகளால் நான் கடத்தப்பட்டேன், கண்கள் கட்டப்ட்டேன், சித்திரவதை செய்யப்பட்டேன் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். சொல்வதற்கு நான் சங்கடப்படுகிறேன். இதில் பாலியல் சித்திரவதையும் அடங்கும்" என அவர் கூறினார். "இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை அனைவரும் புறக்கணித்தால் ராஜபக்ஷ ஆட்சியானது தனக்கு எதிராக பேசுபவர்களை கடத்தும், கொலை செய்யும் சர்வாதிகார ஆட்சியை தொடரும்" என அவர் கூறினார். "மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை சுதந்திரமாக சிந்திக்கு; உலகம் மேற்கொள்ள வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’