உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலி்ல் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததற்கு பொறுப்பேற்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மக்கள் ஓய்வு கொடுத்துள்ளனர். பாஜக மற்றும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளன. இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் தீவிர பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, உத்தரப் பிரதேசத்தில் நான் தான் முன் நின்று பிரச்சாரம் செய்தேன். அதனால் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்கிறேன். தோல்வியும் எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்துள்ளது. இந்த மாநிலத்தில் கட்சியின் அடிப்படையே பலவீனமாக உள்ளது. நாங்கள் தோல்வியடைந்தாலும் பிரச்சாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றார். செய்தியாளர்கள் மேலும் கேள்வி கேட்க முயன்றபோது தனக்கே உரிய புன்னகையை உதிர்த்துவிட்டு சென்றுவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’