தமிழக சட்டமன்ற உறுப்பினர்களை விமர்சித்து கருத்து வெளியிட்ட இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவரை தமது நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரான டி.ராஜா தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினருடன் தொடர்புடையவர்கள் அதன் காரணமாகவே மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனர். அது தொடர்பில் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் கருத்து தெரிவித்திருந்தார். இக்கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் புகாரை தெரிவித்துள்ளதாகவும்; இந்திய சட்டமன்றத்தில்; இச்சம்பவம்; தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளதாகவும் டி.ராஜா குறப்பிட்டுள்ளார்.
எனினும் இவ்விடயம் தொடர்பில் இந்திய வெளியுறவு இணைச் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் பகிரங்க மன்னிப்புக் கோரியிருந்தார். எனினும் இது போதாது என்பதுடன் மத்திய அரசு பகிரங்கமாக கண்டிப்பதுடன் இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசத்தை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயளாளரான டி.ராஜா தெரிவித்துள்ளார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’