வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 8 மார்ச், 2012

புராதன ஊன்றுகோள் விற்பனை முயற்சி தோல்வி : விற்க முயற்சித்தவர் தப்பியோட்டம்

ண்டியை ஆண்ட இறுதி மன்னன் இரண்டாம் இராஜசிங்கன் பாவித்ததாகக் கருதப்படும் புராதனப் பெறுமதி மிக்க உலோக ஊன்றுகோள் ஒன்றை விற்கும் முயற்சி தோல்வியடைந்தது, விற்க முனைந்தவரும் தலைமறைவானார். ஊன்றுகோளை விற்க முயன்றவர் இராணுவ வீரர் ஒருவரே என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஊன்றுகோளை கைவிட்டு, இவர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கண்டி நகரில் நடந்த இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது : மேற்படி ஊன்றுகோள் மூன்று அடி மூன்றங்குலம் நீளம் கொண்டது. இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டிருந்த இது உலோகத்தால் உருவாக்கப்பட்டிருந்தது. ஊன்றுகோளை ஐந்து இலட்சம் ரூபாவுக்கு விலை பேசிக் கொண்டிருந்த வேளை, தமக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் அவ்விடத்துக்கு விரைந்துள்ளனர். இதன் போது, அதனை விற்க சந்தேக நபர், ஊன்றுகோலை கைவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாவும் அவர் ஒரு இராணுவ வீரர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரைக் கண்டுபிடித்துக் கைது செய்ய தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’