வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 27 மார்ச், 2012

இலங்கை தொடர்பான தீர்மானம் அரசியல் நோக்குடையது: ரஷ்யா


.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் முயற்சியினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்தமைக்காக இந்தியாவை நேரடியாக விமர்சிக்காத ரஷ்யா, இத்தீர்மானம் அரசியல் நோக்கில் கொண்டுவரப்பட்டது எனவும் மனித உரிமை மன்றத்தின் மதிப்பை கெடுத்ததாக அமைந்துவிட்டது எனவும் கூறியுள்ளது. புதுடில்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் எனப்படும் பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னபிரிக்கா நாடுகளின் உச்சிமாநாட்டிற்கு முன் ரஷ்யத் தூதுவரான அலெக்ஷாண்டர் எம்.கடக்கினின் இந்த விமர்சனம்,
சர்வதேச பிரச்சினைகளில் ஒத்தியங்கும் இயல்பை கொண்டுவர முயற்சிக்கும். இக்குழுவிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை வெளிக்கொணர்ந்துள்ளது. இலங்கைக்கு எதிராக வாக்களித்தமை இந்தியாவின் சொந்தத் தீர்மானம் ஆகும். இத்தீர்மானம் அரசியல் காரணங்களால் கொண்டுவரப்பட்டது. இது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் மதிப்பைக் குறைத்துள்ளது என கடக்கின் கூறினார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஏன் தனியொரு நாடு கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது? ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை செயற்படும் முறை அல்ல இது என அவர் கூறினார். மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையைக் கண்டிக்கும் இத்தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யாவும் சீனாவும் வாக்களித்தன. இத்தீர்மானத்தை அமுலாக்குவதை கண்காணிப்பது பற்றிய ஏற்பாட்டின் வரைவில் பயன்படுத்தப்பட்ட வசனங்களின் கடுமையைக் குறைக்க தான் நடவடிக்கை மேற்கொண்டதாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடந்த வாரம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’