வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 மார்ச், 2012

இலங்கையில் பிரத்தியேக உரிமைகளை இந்தியா எதிர்பார்க்கக்கூடாது: ரஜீவ


லங்கையில் இந்தியா பிரத்தியேக உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது என ஐ.ம.சு.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான ரஜீவ விஜேசிங்க புதுடில்லியில் கூறியுள்ளார்.
இலங்கையில் சீனாவின் பிரசன்னம் குறித்து இந்திய அசௌகரியமடையக் கூடாது எனவும் நோபாளத்திற்குச் செல்லும் வழியில் ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறினார். 'இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் நாம் நண்பர்கள். இரு நாடுகளுக்கும் தாராளமான இடமுண்டு என அவர் தெரிவித்தார். இலங்கையின் பூகோள அமைவிடம் காரணமாக அது இரு நாடுகளையும் ஈர்க்கிறது. எனினும் பிரத்தியேக உரிமைகளை பெறுவதற்காக இந்தியா நேரத்தை வீணாக்ககூடாது என அவர் கூறினார். இலங்கையில் சீனா பொறுப்பேற்றுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து இந்தியா கவலைகொள்ள வேண்டுமா என வினவப்பட்டபோது, எந்த விதத்திலும் இல்லை என பதிலளித்தார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை உதாரணமாக காட்டிய அவர், 'நாம் அதன் அபிவிருத்தியை முதலில் இந்தியாவுக்கு வழங்குகினோம். அது முன்னெடுக்காதபோது சீனாவுக்கு வழங்கப்பட்டது' என்றார். தற்போது இந்தியா விரைவாக நகர்வதாகவும் காங்கேசன்துறை துறைமுகத்தில் பணியாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சீனா குறித்து இந்தியா கவலைகொள்ளத் தேவையில்லை. சீனா ஒரு பெரியண்ணன் அல்ல எனவும் ரஜீவ விஜேசிங்க கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’