2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் சோனியா காந்திக்கு ரூ36 ஆயிரம் கோடி கிடைத்ததாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இத்தாலிய வர்த்தகர் குவாத்ரோச்சி உதவியுடன் வெளிநாட்டு வங்கிகளில் சோனியா சேர்த்து வைத்திருக்கும் பெருமளவு பணம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ.யிடம் சாமி 232 பக்க மனு ஒன்றையும் கொடுத்துள்ளார். ஆந்திர மாநிலம் நகரில் செய்தியாளர்களிடம் சுப்பிரமணிய சாமி கூறியதாவது:
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை முழுமையாக நடைபெறவில்லை. இதில் சோனியாகாந்தி, அவரது மருமகன் ராபர்ட் வதோராவுக்கும் முக்கிய தொடர்பு உண்டு. அடுத்தபடியாக நான் இந்த 2 பேரையும் தான் குறி வைத்துள்ளேன். அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட் டேன். ஸ்பெக்ட்ரம் ஊழலில் சோனியா காந்திக்கு மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய முழுமையாக விசாரித்தால் இந்த உண்மைகள் வெளிவரும். உலக அளவில் மருத்துவத்தில் இந்தியா பல மடங்கு முன்னேறி விட்டது. ஆனால் சோனியாகாந்தி தனது மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்காவுக்கு அடிக்கடி செல்வது ஏன்? இதில் ஏதோ மர்மம் இருப்பதாக கருதுகிறேன் என்றார் அவர். 232 பக்க மனு இதனிடையே சி.பி.ஐ.யிடம் சுப்பிரமணிய சாமி 232 பக்க புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் ராஜீவகாலத்து போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் நாயகன் குவாத்ரோச்சி உதவியுடன் வெளிநாட்டு வங்கிகளில் சோனியா குவித்துள்ள பணம் பற்றிய விவரங்களை சாமி விளக்கியுள்ளார். ராஜீவும் சோனியாவும் குவாத்ரோச்சியை 40க்கும் மேற்பட்ட முறை சந்தித்துப் பேசியதாக அவர்களது சிறப்புப் பாதுகாப்பு படை அதிகாரி 1997-ல் கூறியிருந்ததையும் சாமி சுட்டிக்காட்டியுள்ளார். ராசீவ் மறைவுக்குப் பிறகு சோனியாவும் குவாத்ரோச்சியும் 20க்கும் மேற்பட்ட முறை சந்தித்துப் பேசியதாகவும் சாமி குறிப்பிட்டுள்ளார். சோனியாவும் ராகுல்காந்தியும் சிபிஐ துறையை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் சாமி தமது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’