வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 12 மார்ச், 2012

தமிழ் மக்களின் நலன்களுக்கும் விருப்பங்களுக்கும் மாறாக அரசு செயற்படாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

மிழ் மக்களின் நலன்களுக்கும் விருப்பங்களுக்கும் மாறாக இந்த அரசு எச்சந்தர்ப்பத்திலும் செயற்படாது. அத்தோடு எமது மக்களின் தேவைகளையும் உணர்வுகளையும் பிரதிபலித்தே நாம் அரசில் அங்கம் வகிக்கின்றோம் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (11) கிளிநொச்சி கல்மடுகுளம் புனரமைக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளுக்கு திறந்து வைத்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு எம் மக்கள் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற சூழலிலேயே வாழ்ந்தார்கள் ஆனால் இன்று அந்நிலைமையிலிருந்து மீட்கப்பட்டு நிரந்தரமான சமாதானத்தையும் கௌரவமான எதிர்காலத்தையும் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலைமையினை பெறுவதற்காக எம் மக்கள் அளவுக்கு அதிகமான இழப்புக்களை சந்தித்திருக்கின்றனர். அழிந்தவற்றை மீளமைக்கவும் மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்தவும் இந்த அரசு பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இவை எம் மக்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாத போதும் தொடர்ந்தும் பல செயற்பாடுகளை முன்னெடுக்கவும் அழிந்துபோன பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பிலும் நாம் அரசிடம் தொடர்ந்து கோரிக்கையினை விடுத்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்கள் அழிந்துபோன இக்குளத்தை மீளக்கட்டியமைத்ததனூடாக இம்மக்களின் வாழ்வாதாரம் மீளவும் மேம்படுத்தப்பட்டுள்ளதென்ற மகிழ்வுடன் நான் இன்று உங்களை சந்திக்கின்றேன். இந்த நாட்டிலே இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று ஒற்றுமையான தேசத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்பதே ஜனாதிபதி அவர்களின் நோக்கமாகும். இந்நோக்கிற்கமைவாகவே அவர் நாட்டின் அனைத்து மக்களையும் தனது பிள்ளைகளைப்போல எண்ணி செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். இப்பிரதேசத்திலே அனைத்து கட்டுமானங்களும் இன்று மீளமைக்கப்பட்டு வருகின்றன. ஒருகட்டுமானத்தை சிதைப்பதென்பது மிக இலகுவான காரியம். ஆனால் அதை அமைப்பதென்பது மிகக்கடினம். அத்தகைய பணியைத்தான் இன்று நாம் முன்னெடுத்து வருகின்றோம். நீண்டகால சிந்தனையுடனும் எதிர்கால சந்ததியினரின் நலனையும் கருத்தில் கொண்டு மேற்கொண்டு வரும் இப்பணியை சிலர் மிக இலகுவாக உதாசீனம் செய்து வருகின்றனர். கடந்த காலத்தில் எமது நாட்டில் இரண்டு தலைமுறையினர் நிம்மதியற்ற வாழ்விற்குள் தள்ளப்பட்டனர். எனவே அவ்விரு தலைமுறையினரும் அனுபவிக்காத ஒரு மகிழ்வான இயல்புச் சூழலை வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்க வேண்டுமென்பதே ஜனாதிபதியின் குறிக்கோள். .அத்தோடு வடக்கின் அபிவிருத்தியென்பது முன்பிருந்ததைவிட இருமடங்கு மேலானதாக அமைய வேண்டுமென்பதும் அவரின் நோக்கம். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகவே இக்குளத்தின் அபிவிருத்திப் பணிகள் அமைந்துள்ளன. அந்தவகையில் இம்மாவட்டத்தில் இரணைமடுக்குளத்திற்கு அடுத்தபடிநிலையை இன்று இக்குளம் எட்டியுள்ளது. இதேவேளை தருமபுரம் புளியம்பொக்கனை ஆகிய பகுதிகளுக்கும் நீர்விநியோகத்தை மேற் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் நாம் மேற் கொண்டுள்ளோம். இதேவேளை இக்குளத்தின் அழிவிற்கும் இப்பிரதேசங்களின் அழிவிற்கும் ஆலோசனை வழங்கியவர்கள் இனிவரும் காலத்திலேனும் மக்களின் ஒற்றுமைக்காகவும் மேம்பாட்டுக்காகவும் உழைக்க முன்வரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இங்கு உரையாற்றிய வாணிப, கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் றிஸாட் பதியுதீன் அவர்கள், இன்று இம்மாவட்டத்தில் அழிந்துபோன அனைத்து கட்டுமானங்களையும் புனரமைக்கின்ற பணி நடைப்பெற்றுக் கொண்டிருகின்றது. இதற்காக அரசு பல கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து வருகின்றது. அதற்காக அமைச்சர் பசில் ராஜபக்ஸ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோர் அரும்பாடுபட்டு உழைத்து கொண்டிருகின்றார்கள் இதனிடையே மீண்டும் எமது நாட்டில் இனரீதியான பிளவுகளை ஏற்படுத்தி மீண்டும் அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை சிலர் மக்கள் மத்தியில் திணித்து வருகின்றனர் எனத்தெரிவித்த அவர் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி பணிகளுககாக செலவு செய்யப்பகின்ற பாரியளவு நிதி அரசு பெறுகின்ற கடனே ஆகும். இக்கடனை இந்த நாட்டில் அம்பாந்தோட்டையில் காலியில் யாழ்ப்பாணத்தில் மன்னாரில் கிளிநொச்சியில் வாழ்கின்ற மக்களே திருப்பிச்செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் உரையாற்றிய ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் அவர்கள் கடந்த யுத்த காலத்தில் அழிக்கப்பட்ட இக் கல்மடுகுளம் இன்று எண்ணாயிரம் இலட்சம் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்டு எமது விவசாயிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே பயிரிடப்படுகின்ற நிலங்களுடன் மேலும் பல ஏக்கர்கள் இரு போகங்களும் பயிரிடப்பட முடியும். எனவே இச்செயற்பாட்டிற்கு துணைபுரிந்த அமைச்சர் பசில் ராஜபக்ஸ அவர்களுக்கு எமது மாவட்ட விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இம்மாவட்டத்தில் பல சிறிய மற்றும் பெரிய குளங்கள் பெருமளவு நிதி ஒதுக்ககீட்டில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயற்பாடுகள் மீள்குடியேற்றம் முதல் இன்று வரை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் உட்கட்டுமானப் பணிகள் வரை விரிந்து செல்கின்றன. குறிப்பாக எமது பிரதேசத்தில் பெருபாலான வீதிகள் புனரமைக்கப்படாது உள்ளன. அவ்வீதிகளைப் புனரமைப்பது தொடக்கம் பல்வேறு தேவைகள் வரை பூhத்தி செய்ய வேண்டியுள்ளது. அதற்காக இம்மாவட்டம் மேலும் பல கோடி ரூபாக்களை அமைச்சிடம் எதிர்பார்த்து நிற்கிறது எனவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் திட்டப்பணிப்பாளர் லியனகே மற்றும் பல உயரதிகாரிகள் உட்பட பெருந்திரளாலான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’