வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 மார்ச், 2012

மக்கள் நலன் கருதியே எமது அரசியல் கொள்கை! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மது மக்களது முன்னேற்றம் நலன்கள் அபிவிருத்தி போன்றவைதான் எமது அரசியல் கொள்கைகளே அன்றி எமது கட்சியின் வளர்ச்சி நோக்கியதல்ல என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வேலணை மேற்கு அம்பிகை நகரில் அமையப் பெற்றுள்ள சிறீ மகேஸ்வரி அம்பாள் தேவஸ்தானத்தின் வசந்த மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் இன்று (9) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். இப்பகுதி மக்களுடன் இணைந்து இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டமை தனக்கு பெருமகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்த அமைச்சர் அவர்கள் வேலணை பகுதியில் பல்வேறு தேவைகள் தொடர்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் வேலணைப் பகுதியினது மட்டுமல்லாது முழுத் தீவகப் பகுதிகளிலும் நிலவிவரும் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் தீவக ஆய்வு மாநாடொன்று விரைவில் நடாத்த இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த மாநாட்டின் மூலம் தீவகப் பகுதியின் அனைத்துத் துறைகள் சார்ந்தும் உரிய நிபுணர்கள் குழுவின் மூலம் ஆய்வு நடாத்தப்பட்டு தேவைகள் இனங்காணப்பட்டு அவை தீர்த்து வைக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதியளித்தார். எமது வேண்டுகோளுக்கு இணங்க அரசாங்கம் இவ்வருட வரவு செலவுத்திட்டத்திற்கு மேலதிகமாக சுமார் ஆயிரம் கோடி ரூபா நிதியை வடமாகாணத்திற்கென ஒதுக்கியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் இதன் மூலமாக இவ்வருட இறுதிக்குள் இப்பகுதியின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் எனத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.























0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’