வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 10 மார்ச், 2012

யாழ் கலாசார நிலையம் காட்சி விளக்க நிகழ்வு!

ந்திய அரசின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ் கலாசார நிலையம் தொடர்பிலான காட்சி விளக்க நிகழ்வு இன்றைய தினம் (9) மாலை யாழ் நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகவும் வடக்கு மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர். மேற்படி கலாசார நிலையத்திற்கான கட்டிட வரைவு போட்டியொன்றை யாழ் மாநகர சபையும் இலங்கைக்கான இந்தியத் தூதரகமும் இணைந்து நடாத்தி இருந்தது. நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட இப்போட்டியில் முதலிடம் பெற்ற மதுரா பிரேமதிலக்கவின் நிர்மாணம் தொடர்பிலான காட்சி விளக்கமே இன்று இடம்பெற்றது. முதல் இடத்தைப் பெற்ற இவருக்கு இலங்கைக்கான இந்திய தூதரகம் 7500 அமெரிக்க டொலர்களை பரிசாக வழங்கியிருந்தது. மேற்படி நிர்மாணம் தொடர்பில் பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். அமைச்சர் அவர்களும் ஆளுநரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.














0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’