வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 15 மார்ச், 2012

சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவத்தினர் உட்படுத்தப்பட்டால் இனக்கலவரம் ஏற்படும்: சம்பிக்க எச்சரிக்கை


லங்கையில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தவே அமெரிக்கா ஜெனிவாவில் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது. சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவ வீரர்கள் உட்படுத்தப்பட்டால் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்டதைப் போன்ற இனக்கலவரம் உள்நாட்டிலும் இடம்பெறும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவருமான சம்பிக்க ரணவக்க எச்சரித்தார்.
நாட்டில் மீண்டும் இனங்களுக்கு இடையில் பிரார்த்தனைகளை உருவாக்கும் வகையில் மேற்குலக சமூகம் செயற்படக்கூடாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுடனும் ஏனைய தீய சக்திகளுடனும் இணைந்து இலங்கைக்கு எதிராக செயற்படுவதை உடன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதுத் தொடர்பாக கேசரிக்கு தொடர்ந்து கூறுகையில்: அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருகின்றது. இதில் மேற்குலக நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டு நாட்டை மீண்டும் சீரழிக்கும் பிரேரணையை ஆதரித்து பேசி வருகின்றது. எவ்வாறாயினும் புலிகள் இலங்கையில் ஒழிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் இவைகளுக்கு இடையில் ஒற்றுமையும் நிரந்தர சமாதானமும் ஏற்பட்டுள்ளது. இதனை சீர்குலைக்கும் வகையிலேயே அமெரிக்காவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் செயற்பட்டு வருகின்றன. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை சமர்ப்பித்துள்ள அமெரிக்கா அதன் ஊடாக இலங்கை இராணுவத்தை சர்வதேச விசாரணைகளை பொறிமுறைக்குள் சிக்க வைத்து தண்டனைகளை வழங்கவே முயற்சிக்கின்றது. புலிகளை அழித்திருக்காவிட்டால் இன்று இலங்கை இவ்வாறான சவால்களை ஒரு போதும் எதிர்கொண்டிருக்காது. எவ்வாறாயினும் 1983 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவர சூழலை நாட்டில் ஏற்படுத்த அமெரிக்காவோ கூட்டமைப்போ முயற்சிக்கக்கூடாது. தேசிய பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்று உள்ளது. அதே போன்று நீதிமன்ற கட்டமைப்பு ஒன்றும் உள்ளது. எனவே ஜெனிவாவில் பிரேரணையைக் கொண்டு வந்து உள்நாட்டு சம்பவங்களை விசாரணை செய்ய வேண்டியதில்லை என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’