வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 2 மார்ச், 2012

சிரிய ஜனாதிபதி அஸாத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன: பராக் ஒபாமா


சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். இன்று வெளியான அட்லாண்டிக் மன்த்லி எனும் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியிலேயே ஒபாமா இவ்வாறு கூறியுள்ளார்.
அஸாத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பது தமது கணிப்பு எனவும் அது எப்போது என்பதுதான் கேள்வி எனவும் ஒபாமா கூறியுள்ளார். 'இப்போது இதை நாம் வேகப்படுத்தலாமா? ஆதை செய்வதற்காக நாம் உலக சமூகத்துடன் இணைந்து செயற்படுகிறோம்' என அவர் கூறியுள்ளார். லிபியாவை விட சிரியா பெரியது, சிக்கலானது எனவும் அந்நாட்டின் மீதான ஐ.நா. நடவடிக்கையை ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்க்கின்றன என்பதையும் ஒபாமா ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் சிரிய படைகளின் தாக்குதலுக்குள்ளாகும் நகரங்களுக்கு 'சிரியாவின் நண்பர்களுக்கு' எனும் குழுவின் ஊடாக மனிதாபிமான உதவிகளை ஊக்குவிப்பதில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 'ஆனால் அமைதியான, ஸ்திரமான, பிரதிநிதித்துவப்படுத்தும் சிரிய அரசாங்கத்துக்கான மாற்றத்தையும் அவர்கள் துரிதப்படுத்த முடியும். அப்படி நடந்தால் அது ஈரானுக்கு பாரிய இழப்பாக அமையும்' எனவும் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’