வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 28 மார்ச், 2012

நாம் என்ன செய்யவேண்டுமென யாரும் கூறக்கூடாது: ஜனாதிபதி மஹிந்த

நல்லிணக்கத்திற்கூடாக நிரந்தர சமாதானத்தை அடைவதற்கு மேலதிகமாக ஒரு மைல் நடப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ள அதேவேளை, இலங்கை என்ன செய்ய வேண்டும் என்பதை எவரும் கூறக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2012 கண்காட்சியில் இன்று காலை உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். 'பெரும் தியாகங்களுக்கு மத்தியில் வென்ற சமாதானத்திற்கு மத்தியில் இலங்கை உள்ளது. நாம் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். நல்லிணக்கத்திற்கூடாக நிரந்தர சமாதானத்தை அடைவதற்கு மேலதிகமாக ஒரு மைல் நடப்பதற்கு எமது அரசாங்கம் தயாராகவுள்ளது. இது எமது மக்களுக்கான எமது அர்ப்பணிப்பாகும். நாம் என்ன செய்ய வேண்டுமென யாரும் கூறக்கூடாது' என அவர் கூறினார். "இலங்கை மேற்கொண்டுவரும் துரித அபிவிருத்தி செயன்முறைகள் இங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய செயற்பாடுகளுக்கான ஐந்து கேந்திரங்களை அமைக்கும் செயன்முறை மேற்கொள்ளப்படுகிறது. இது மஹிந்த சிந்தனையின் கீழ் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக, புதிதாக வென்ற சமாதானத்தின் ஆச்சரியமாக, வலிமையான சமாதானத்தினதும் தேசிய ஐக்கியத்தின் ஆச்சரியமாக விரைவில் மாற்றும். இது எமது சொந்த பாரம்பரியங்களுடன் எமது சொந்த முயற்சிகளூடான நல்லிணக்கத்தை அடைவதன் ஆச்சரியமாகும்" எனவும் ஜனாதிபதி கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’