இலங்கை விவகாரத்தில் விரைவில் பொருத்தமான முடிவொன்று காணப்படும் என திமுக தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
மு.கருணாநிதி மார்ச் 9 ஆம் திகதி எழுதிய கடிதத்திற்கு பதிலளிக்கும் முகமாக மார்ச் 15 ஆம் திகதியிட்டு சோனியா காந்தி எழுதிய கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இக்கடிதத்தின் பிரதிகளை ஊடகங்களுக்கு திமுக விநியோகித்தள்ளது. 'இம்முக்கிய விவகாரங்கள் குறித்து அரசாங்கம் அறிந்துள்ளதாகவும் தீர்வொன்றை காண்பதற்கான முயற்சியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் உங்களுக்கு எழுதுவார் என நம்புகிறேன். விரைவில் பொருத்தமான தீர்வு காணப்படும் என நம்புகிறேன்' என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக்கூடும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’