வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 மார்ச், 2012

இலங்கை விவகாரத்தால் இந்திய மத்திய அரசிலிருந்து அமைச்சர்களை திமுக வாபஸ்பெறும்?


.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் பிரேரணையை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் இந்திய மத்திய அரசாங்கத்திலிருந்து தமது அமைச்சர்களை விலக்கிக் கொள்வதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கையளவில் தீர்மானித்துள்ளது. திமுக தலைவர் மு.கருணாநிதியின் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக உயர்மட்ட தலைவர்கள் கூட்டத்தில் இத்தீரமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திலிருந்து செவ்வாய்க்கிழமையுடன் திமுக அமைச்சர்களை வாபஸ் பெற்று வெளியிலிருந்து ஆதரவுவழங்க வேண்டுமென திமுகவின் பெரும்பாலான தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர். எனினும் மார்ச் 23 ஆம் திகதி அமெரிக்காவின் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் இவ்வாறான கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் எம்.கே.அழகிரி மற்றும் சிலர் கருத்துத் தெரிவித்தனர். கட்சியின் உயர்மட்டக்கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் திமுக தலைவர்கள் சம்பிரதாயபூர்வமற்ற வகையில் கடந்த சனிக்கிழமை முதல் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். திமுக பொதுச்செயலாளர் கே.அன்பழகன், எம்.கே.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் முதலானோர்; இவ்விடயத்தில் கடும் நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கு ஆதரவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’