வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 14 மார்ச், 2012

மனித உரிமை மீறல் தொடர்பான புதிய குற்றச்சாட்டுக்கள் குறித்து அமெரிக்கா கவலை


லங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டதாகக் கூறும் புதிய குற்றச்சாட்டுக்கள் பற்றி கவலை தெரிவித்துள்ள அமெரிக்கா, பொறுப்பான சகலரையும் விசாரணைக்கு உட்படுத்துவதை ஆதரிப்பதாக கூறியுள்ளது.
மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் எனக் கருதப்படும் 12 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்படுவதை காட்டும் வீடியோ ஒளிபரப்பு உட்பட புதிய சான்றுகள் இலங்கை இராணுவத்துக்கு எதிராக வெளிவந்துள்ள நிலைமையில் அமெரிக்காவின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. 'நாம் மீண்டும் மீண்டும் கூறியதுபோல சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் இலங்கையில் மீறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையிட்டு நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை இன்னும் சான்றுறுதிப்படுத்தவில்லை. 'காட்சிப்படுத்தப்பட்டுவரும் இந்த வீடியோவை பொறுத்தவரையில் இதில் பிரபாகரனின் மகன் உள்ளார் என எம்மால் உறுதி செய்ய முடியாமல் உள்ளது என அமெரிக்க இராஜங்க திணைக்களத்தின் பேச்சாளரான விக்டோரியா நூலண்ட் செவ்வாய்க்கிழமை நடந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது கூறினார். இதேபோன்ற காரணங்களினால்தான் நல்லிணக்கம், விளக்கம் கூறும் பொறுப்பு ஆகியவற்றை நோக்கி முக்கிய நடவடிக்கை எடுக்கக் கோரும் தீர்மானம் ஒன்றை நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தில் கொண்டு வந்துள்ளோம் என நூலண்ட் கூறினார். கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், நூலண்ட் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என்பதை இலங்கை அறிவிப்பதை நாம் ஊக்குவிக்கின்றோம் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’