தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
'நீண்டகாலமாக இது நடைபெற்று வருகின்றது. எங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த அரசாங்கம் தொடர்ந்து முயற்சித்து வருகின்றது. எங்களது கட்சியில் உறுப்பினராக இருந்த ஒரேயொரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினரையும்; அவர்கள் களவாடிவிட்டனர். அவரை பொதுமக்கள் பலர் எதிர்த்தபோதிலும், பொதுத்தேர்தலில் வேட்பாளராக நான் நியமனம் செய்தேன். அவர் தேர்தலில் வெற்றி பெற்றார். பின்னர் அரசாங்கம் அவரைக் களவாடிவிட்டது' என அவர் கூறினார். நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் பிளவுபடுத்துவதில் அரசாங்கம் ஓரளவு வெற்றி கண்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். 'ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை அரசாங்கம் பிளவுபடுத்தியுள்ளது. எங்களது கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து வருகின்றனர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை' என அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’