வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 1 மார்ச், 2012

ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிரான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தினால் தள்ளுபடி


னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்க பிராந்திய நீதிமன்றமொன்றில் தொடுக்கப்பட்ட வழக்கினை நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார். 'அவலங்கள் நிறைந்ததாகவும் அதிர்ச்சியான விடயங்களை உள்ளடக்கியதாகவும் இந்த வழக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் ஒரு நாட்டின் தலைவர் என்னும் சிறப்புரிமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அலுவலகம் அறிவித்துள்ளது. ஆகையினால் இந்த வழக்கினை தள்ளுபடி செய்கிறேன்' என இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கொல்லின் கொல்லர் கொடெல்லி தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக புலம்பெயர் தமிழர்கள் இந்த வழக்கினை தொடுத்திருந்தனர். அந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே மேற்படி தீர்ப்பினை நேற்றையதினம் நீதிபதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’