வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 2 பிப்ரவரி, 2012

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதால் என்னை விசாரிக்கலாம்: பிரதியமைச்சர் முரளிதரன்


னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வரவேற்கின்றேன் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று தெரிவித்தார்.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது போன்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் எனது பெயர் குறிப்பிடப்படுள்ளமையினால் என்னையும் விசாரிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். குறித்த அறிக்கையில் என் மீது குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டு இடம்பெற்ற கால பகுதியில் நான் நாட்டிலேயே இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மீள்குடியேற்ற அமைச்சில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பிரதி அமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "13ஆவது திருத்த சட்டத்திற்கு அப்பால் அதிகார பரவலாக்கலை மேற்கொள்ள அரசாங்கம் தயாரகவுள்ளது. இதற்காகவே நாடாளுமன்ற தெரிவு குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். இதன் ஊடாக அதிகார பரவாலக்கம் மேற்கொள்ள முடியும். காணி அதிகாரம் ஏற்கனவே மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது அனைத்து விதமான காணிகளுக்கான அதிகாரம் பிரதேச செயலாளருக்கே வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரதேச செயலாளர்கள் முதலமைச்சரின் கீழே உள்ளனர். ஆகவே பிரதேச செயலாளரை கட்டுப்படுத்துவதன் மூலம் காணி அதிகாரத்தை மாகாண முதலமைச்சர் பெற முடியும். அது போன்றே ஒவ்வொரு மாகாணத்திற்கும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டுள்ளாhர். இவருடன் முதலமைச்சர்கள் இணைந்து செயற்படுவதன் மூலமும் பொலிஸ் அதிகாரத்தை பெற முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு கோருவது போன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை எந்த வகையில் வழங்க முடியும். அவ்வாறு வழங்கினால் ஏனைய மாகாணங்களுக்கும் கட்டாயம் வழங்க வேண்டும். இது போன்ற கோரிக்கைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் முன்வைப்பது வழமை. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்கள் மத்தியில் உரிமை தொடர்பில் பேசி விட்டு வந்து நாடாளுமன்றத்தில் அபிவிருத்தி மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டுவர். இது தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் வழமையாகும்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’