வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 8 பிப்ரவரி, 2012

வடபிராந்தியத்துக்கான மின்சார சபையின் பொதுமுகாமையாளர் அலுவலக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!


லங்கை மின்சார சபையின் வடபிராந்தியத்துக்கான பொதுமுகாமையாளர் அலுவலக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களும் இணைந்து நாட்டி வைத்தனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் புதிதாக அமையப் பெறவுள்ள கட்டிடத்திற்கான அடிக்கல் இன்றைய தினம் நாட்டி வைக்கப்பட்டது. முன்பதாக அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட அதிதிகள் பிரதான வாயிலிருந்து நிகழ்விடத்திற்கு மங்கள வாத்தியம் சகிதம் அழைத்து வரப்பட்டனர். மங்கள விளக்கேற்றி வைக்கப்பட்டு சிறப்பு பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அமையப்பெறவுள்ள புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லை அமைச்சர்கள் இருவரும் நாட்டி வைத்ததுடன் பெயர்ப் பலைகையினையும் திரைநீக்கம் செய்து வைத்தனர். 150 மில்லியன் ரூபா செலவில் 04 மாடிகளைக் கொண்டதாக இப்புதிய கட்டிடம் அமையப் பெறவுள்ளதுடன் இதற்கான பூர்வாங்க வேலைகள் யாவும் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் உள்ளிட்ட மின்சக்தி எரிசக்தி அமைச்சின் துறைசாhந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். கடந்த 05ம் திகதி வடபகுதிக்கான விஜயத்தை மேற்கொண்ட மின்சக்தி அமைச்சர் வவுனியா கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் 735 மில்லியன் ரூபா செலவில் மின்சாரத் திட்டங்களை ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’