காரைநகர் ஈழத்துச் சிதம்பரம் தேவஸ்தான வளாகத்தில் புதிதாக அமையப் பெறவுள்ள கோகிலம் மற்றும் பிருந்தாவனத் திட்டத்திற்கான அடிக்கல்லை பிரதமர் தி.மு. ஜயரட்ண மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் நாட்டி வைத்தனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க காரைநகர் சிவன் கோவிலுக்கு பிரதமர் ஜயரட்ண இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டார். இவரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்று சிவன் கோவிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. தொடர்ந்து கோவில் வளாகத்தில் பசுக்களைப் பாதுகாத்து பராமரிக்கவென புதிதாக அமையப் பெறவுள்ள கோகிலம் பிருந்தாவனத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இதேவேளை காரைநகர் மணற்காடு முத்துமாரியம்மன் கோவிலுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மற்றும் அமைச்சர் ஆகியோர் சிறப்பு பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’