வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

பிரித்தானிய மாணவர் விஸா விதிகளில் ஏப்ரல் முதல் மாற்றம்



பி ரிட்டனில் கல்வி கற்பதற்கான மாணவர் விஸாவுக்கான புதிய ஒழுங்குவிதிகள் 2012 ஏப்ரல் மாதத்திலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் இன்று விடுத்த ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்குவிதிகள் மூலம் துஷ்பிரயோகங்கள் குறைக்கப்படும் எனவும் புத்திசாலித்தனமான சிறந்த மாணவர்கள் மாத்திரம் பிரிட்டனில் தங்கியிருப்பதையும் வேலை செய்வதையும் இது உறுதிப்படுத்தும் எனவும் பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேனியன் கிறீன் கூறியுள்ளார். புதிய விதிகள் மூலம், மாணவர்கள் கல்வியின்பின் பிரிட்டனில் இரு வருடங்கள் தங்கியிருந்து தொழில்புரிவதற்கான வாய்ப்புகள் நிறுத்தப்படும். பல்கலைக்கழகங்களில் பட்டம்பெறும் சிறந்த மாணவர்களுக்கு பிரிட்டனில் தங்கியிருப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும். எனினும் ஏப்ரல் 6 ஆம் திகதியின்பன் அவர்கள் பிரித்தானிய எல்லை முகவரகத்தினால் அங்கீகரிக்கபப்டும் நிறுவனமொன்றினால் 20,000 ஸ்ரேலிங் பவுண் அல்லது அதற்கு அதிகமான சம்பளத்தில் தொழில்வாய்ப்பை பெற வேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’