அமைதி காக்கும் நடவடிக்கை தொடர்பான பான் கீ மூனின் சிரேஷ்ட ஆலோசனைக் குழுமத்தில் இலங்கை இராணுவ ஜெனரல் ஒருவரை நியமித்துள்ளதையிட்டு தனது கிலேசத்தை செயலாளர் பான் கீ மூனுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது இலங்கை இராணுவத்தின் 58ஆவது பிரிவுக்கு தளபதியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வாவை குறித்தே நவநீதம்பிள்ளை இந்தக் கடிதத்தை எழுதினார். சிரியா பற்றிய ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தின் பின், நவநீதம்பிள்ளையிடம் பான் கீ மூனின் சிரேஷ்ட ஆலோசனைக் குழுமத்தில் ஜெனரல் சவேந்திர நியமிக்கப்பட்டதையிட்டு நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என நிருபர்கள் வினவினர். 'இது கவலை தரும் விடயம் தான். நியமனத்துக்கு முன் ஒருவரது பழைய காலத்தை ஆராய்வது தொடர்பில் ஐ.நா.வுக்கு தெளிவான கொள்கை உள்ளது. எனது அலுவலகத்தின் பொறுப்புக்களில் இதுவும் ஒன்றாகும்' என அவர் பதிலளித்தார். 'மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஆட்களின் பட்டியல் எம்மிடம் உண்டு' என நவநீதம்பிள்ளை கூறினார். ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் ஐ.நா. தூதுக்குழுக்களைக் கொண்ட 'ஆசிய குழு' தான் ஜெனரல் சில்வாவை இந்த ஆலோசனை சபைக்கு நியமித்தது எனவும் இதில் பான் கீ மூனுக்கு எந்த பொறுப்பும் இல்லை எனவும் ஐ.நா. உத்தியோகத்தர்கள் கூறுகின்றனர். பான் கீ மூன் நியமித்த ஐ.நா. நிபுணர்குழு, யுத்தத்தின்போது பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டமைக்கு நம்பகரமான ஆதாரம் உள்ளதாக ஐ.நா. நிபுணர்குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஆறு பெரிய படை அணிகளில் ஒன்றுக்கு ஜெனரல் சவேந்திர சில்வா தளபதியாக இருந்தார் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எனினும் வெளிநாட்டில் உள்ள தமிழ் புலிகளின் வலையமைப்புக்கள் சோடித்த குற்றங்களை நிபுணர்குழு திருப்பிக் கூறியுள்ளது எனக் கூறி அந்த அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது. நவநீதம்பிள்ளையின் கருத்தையிட்டு ஐ.நா.வுக்கான இலங்கை பிரதிநிதிகள் குழு உடனடியாக கருத்து எதையும் கூறவில்லை.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’