வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 9 பிப்ரவரி, 2012

எமது மக்களுக்கான அரசியல் தீர்வை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும்! - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


சாவகச்சேரி வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட விடுதி கட்டடத் தொகுதி மற்றும் வைத்தியர்களது விடுதி என்பவற்றைத் திறந்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றிய பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இம்மாவடட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் அதிக அக்கறையும் அன்பும் கொண்டுள்ள ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி இப்பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இதேபோன்று அமைச்சர்களும் வருகை தருவதாகவும் இந்நிலை முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.
அரசியல் வாதிகள் சிலர் இங்கு மக்களின் பிரச்சினைகளை தீராப் பிரச்சினையாக்கிக் கொண்டு அதில் தமது அரசியலை நடத்த விரும்புகின்றனர் என்பதுடன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையிலான இந்த அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் பலமுள்ள அரசினால்தான் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்பதுடன் அந்த வகையில்தான் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு 06 மாத கால அவகாசம் வழங்கி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் தற்போது அதனை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தை அனைத்துத் தரப்பினரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது எமது அரசியல் வரலாற்றில் ஒரு காலத்தில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் சரி அன்றி ஆட்சியதிகாரத்தில் இருக்கும் எவராயினும் சரி கொழும்பில் இருந்து யாழ் நோக்கி அல்லது வடக்கு நோக்கி வருவதென்றால் அது ஒரு அதிசயமான நிகழ்வாகவே இருக்கும். ஆனாலும் எமது ஐனாதிபதி அவர்கள் இப்போது வட பகுதி தமிழ் மக்களை சந்திப்பதற்காக இங்கு அடிக்கடி வந்து போகின்றார். அதற்கு காரணம் அவர் தமிழ் மக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறையும் பற்றுதலுமேயாகும். இவ்வாறு இன்று வந்திருக்கும் அவரை தமிழ் மக்களின் சார்பாக நேசக்கரம் நீட்டி வரவேற்கின்றேன். வலிமையுள்ளவரால் மட்டுமே அரசியலுரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். பலமுள்ள அரசாங்கத்தால் மட்டுமே அரசியலுரிமைப் பிரச்சினை முதற்கொண்டு அiனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். இந்த நாட்டில் அழிவு யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் மட்டுமே நாம் விரும்பும் அரசியல் தீர்வையும் இங்கு நடைமுறைப்படுத்த முடியம். அண்மையில் பகவான்சிங் என்ற பத்திரிகையாளர் தமிழ் நாட்டில் இருந்து இங்கு வந்திருந்தார். அவர் தமிழ் நாடு திரும்பியதும் இந்திய ஊடகங்களுக்கு ஒரு செய்தியை தெரிவித்திருந்தார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் தமிழ் மக்களுக்கான அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியவில்லை என்றால் இனி எக்காலத்திலும் எந்த ஜனாதிபதியாலும் தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்திருக்கிறார். இதுதான் உண்மை.. ஆகவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது ஆட்சிக் காலத்தையும், ஜனாதிபதி அவர்களையும் அனைத்து தமிழ்த் தலைமைகளும் அரசியலுரிமைப் பிரச்சினைத் தீர்வுக்காக சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். யுத்தத்திற்கு பிந்திய சூழலில் அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டிருக்கிறது. மீள் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பத்தாயிரத்திற்கும் அதிகமான முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அழிவடைந்த எமது பிரதேசங்களை நோக்கி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருpகின்றன. இவ்வாறு அரசாங்கத்தால் நடத்தி முடிக்கப்பட்ட இன்னமும் நடந்து கொண்டிருக்கும் பணிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வரவேற்பதில்லை. நன்றி கூட தெரிவிப்பதில்லை. காரணம் அவர்களது சுயலாப அரசியல். எமது மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தீரக்கப்படக்கூடாது என்பது அவர்களது விருப்பம். அவ்வாறு தீர்க்கப்பட்டுவிட்டால் அதை பகிரங்கப்படுத்தவோ அன்றி வரவேற்கவோ அவர்களுக்கு விருப்பம் இல்லை. இந்நிலையில் நான் தமிழ் மக்கள் சார்பாக ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். ஓர் அரசாங்கம் ஆற்றுகின்ற பணிகளை வரவேற்று, நன்றி தெரிவிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதன் ஊடாகவே இன்னமும் ஆற்ற வேண்டிய பணிகளை அரசாங்கம் ஆற்றுவதற்கான உற்சாகத்தை வழங்க முடியும். ஊக்குவிப்பை வழங்க முடியும். அரசாங்கத்துடன் இணக்கமாகப் பேசியே அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். அதற்காகவே நாம் அரசாங்கத்துடன் உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டு தமிழ் மக்களின் உரிமைக்கும் குரல் கொடுத்து வருகின்றோம். நாமும் நினைத்திருந்தால் அரசாங்கத்தை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்து கொண்டிருக்கலாம். வீர வசனங்களைப் பேசிக்கொண்டிருக்கலாம். ஏதிர்ப்பு அரசியலை நடத்திக் கொண்டிருக்கலாம். அதன் மூலம் எமது மக்களுக்காக எதை நாம் பெற முடியும். ஆகவே யாருடன் பேசி அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமோ, அந்த அரசாங்கத்துடனேயே நாம் இணக்கமாகப் பேசி வருகின்றோம். நாம் எடுத்துக்கொண்ட இந்த நிலைப்பாடு காரணமாக நாம் பல தூற்றுதல்களை இழிச்சொற்களைத் தாங்கி நிற்கிறோம். தமிழ் பேசும் மக்களுக்காக நாம் எந்த தூற்றுதல்களையும் தாங்கி நிற்கத் தயார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களது உறுதியான ஆட்சியின் கீழ் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை நாம் பெற்றுக்கொடுக்காத வரை நாம் ஓயப்போவதில்லை. நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அங்கம் வகிக்க வேண்டும். என்பதையோ நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம். 13 வது திருத்தச்சட்டத்திற்கு மேலும் அதிகாரங்களை வழங்கி அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண தயார் என்று ஜனாதிபதி அவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிஷ்ணா அவர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். நிச்சயம் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’