வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

அமைச்சர்களின் நெருக்கமானவர் எனக் கூறி ஏமாற்றிய குற்றச்சாட்டு: அக்கரைப்பற்றில் ஒருவர் கைது


மைச்சர்களின் இணைப்பு செயலாளர் என தெரிவித்து பொதுமக்களை ஏமாற்றினார் என்ற குற்றாச்சாட்டின் கீழ் அக்கரைப்பற்றை சேர்ந்த எம்.லாபீர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.பி அஜித் ரோஹன  இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
அரச நிறுவனங்களில் தொழில் பெற்று தருவதாக கூறி பொதுமக்களிடமிருந்து பணம் பெற்று ஏமாற்றியுள்ளார் எனவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார். அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள இவர், நாளை புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, விவசாய மற்றும் வனவிலங்கு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா ஆகியோரின் இணைப்பு செயலாளர் என கூறிக் கொண்டு பொதுமக்களிடம் தொழில் பெற்று தருவதாக ஏமாற்றியதுடன் காணி அபகரிப்பிலும் ஈடுபட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, அக்கரைப்பற்றை சேர்ந்த எம். லாபீர் தனது இணைப்பு செயலாளராக ஒருபோதும் செயற்படவில்லை என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தெரிவித்தார். "குறித்த நபர் தனது அரசியல் மற்றும் கட்சி செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். இதனால் எனது கொழும்பு வேலைகளை மாத்திரம் மேற்கொள்ளவதற்காக நியமிக்கப்பட்டரே தவிர, தொழில் நியமனம் வழங்குவது தொடர்பில் எந்த அறிவுறுத்தலையும் அவருக்கு வழங்கவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், தனது பெயரை கூறி மோசடி செய்துள்ளமையை அறிந்ததையடுத்து, அவருடனிருந்த தொடர்பை நிறுத்தி விட்டதாக மாகாண அமைச்சர் நவரட்ணராஜா மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’