வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

அண்ணன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே எனது அரசியல் வழிகாட்டி - பிரதியமைச்சர் முரளிதரன்

எமது மக்களின் உரிமைகளுக்காக அரசியல் ரீதியில் உழைக்க முன்வருமாறு அண்ணன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். எனவே அவரது வழிகாட்டலினால் தான் நான் இன்று இந்த மேடையிலே வீற்றிருக்கின்றேன் என மீள்குடியேற்றத்திற்கான பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் காலை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மண்டபத்தில் பாரம்பரியத்திற்கு மகுடம் எனும் தொனிப்பொருளில் மூலிகைச் செடிகள் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் போராட்ட வாழ்க்கையில் ஈடுபட்டு விரக்தி நிலையை நான் அடைந்திருந்த போது அண்ணன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே அரசியல் ரீதியில் செயற்பட நான் முன்வரவேண்டும் எனக் கோரி எனக்கு ஊக்கம் அளித்ததுடன் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். அவரது அந்த முயற்சியின் பயனாகவே நான் இன்று இந்த மேடையில் உங்கள் முன்பாக வீற்றிருக்கின்றேன். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் வடபகுதியில் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றையேனும் முன்னெடுக்க முடியுமா? முடியாது... அவர்களால் வெறும் பேச்சுக்களை மட்டுமே கூறிக்கொண்டிருக்க முடியும். எமது மக்களுக்காக எதையும் மேற்கொள்ள முடியாது. மனித அவலங்களையும் அழிவுகளையும் கொண்டுவரும் செயற்பாடுகளை மேற்கொள்ளப் போகின்றீர்களா? இல்லை எமது மக்களுக்கான உரிமைகளுக்காக அரசியல் ரீதியில் செயற்படப்போகின்றீர்களா? என அண்ணன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என்னிடம் கேட்டார். அவருடைய வழிகாட்டலைப் பெற்றதால் தான் இன்று எமது மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் என்னால் செயற்பட முடியுமாக உள்ளது. அண்ணன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் நானும் எமது மக்களுக்கான உரிமைகளையே கேட்டு அவற்றை பெற்றுச் செயற்படுத்தி வருகின்றோம். ஜனாதிபதி அவர்களிடம் கூட நாங்கள் அஞ்சாது இதையே கேட்டு வருகின்றோம் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் தேசிய ஒருங்கிணைப்பாளர் செல்வி க.தங்கேஸ்வரி தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக சுதேச மருத்துவத்துறை அமைச்சர் சாலிந்த திசாநாயக்க அவர்கள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் திருமதி சிவகீதா பிரபாகரன் மண்முனை வடக்கு பிரதேச சபை செயலாளர் திருமதி கலாமணி பத்மராஜா மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளர் உட்படபலர் கலந்துகொண்டனர்.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’