இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களுக்கு இந்தியா துரோகம் இழைத்து விட்டது. இதற்கான பிராயச்சித்தத்தை செய்ய வேண்டிய கடமைப்பாடு இந்தியாவுக்கு உள்ளது என்று இந்திய ஜனதா கட்சித் தலைவர் டாக்டர். சுப்பிரமணியசுவாமி வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயவென எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் பெரிய அளவில் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாக தெரிவித்த அவர், இலங்கையில் வாழ்கின்ற தமிழர்கள் ஆகட்டும் அல்லது தென்னாபிரிக்காவில், மலேசியாவில் வாழ்கின்ற தமிழர்களாகட்டும். ஒட்டுமொத்த தமிழர்களுக்காகவும் இந்திய மத்திய அரசில் பேசக்கூடிய, அழுத்தம் தரக்கூடிய நிலையில் தமிழக அரசியல்வாதிகள் இல்லை. அவர்கள் தமது சுயநலன்களுக்காக இந்திய மத்திய அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக செயற்படுகின்றனர். எனவேதான் இந்திய மத்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கை தமிழர்களுக்கு சாதகமாக அமைவதில்லை. இதில் வெளிநாட்டுத் தமிழர்கள் குறித்து மாத்திரமல்ல தமிழக மக்கள் குறித்தும் இதே நிலைதான் என்றும் அவர் தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’