இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றம் பூரணமாக விவாதிக்க வேண்டுமென தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான கெரி மெக்கத்தி கூறியுள்ளார். இந்த ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட பணி ஆணைக்கும் அதன் சிபாரிசுகளுக்கும் இடையில் வேறுபாடுகள் இருப்பதாக கூறப்படுவதால் இதை ஒரு சில வாரத்தினுள் விவாதிக்க வேண்டுமென மனித உரிமைகள் தொடர்பான விவாதத்தின்போது மெக்கத்தி கூறினார்.
இதே விவாதத்தில் பேசிய தொழில் மற்றும் கூட்டுறவு கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கேப்ஸ் இலங்கையின் பொறுப்புக் கூறவ் பிரச்சினை பற்றி ஐக்கிய நாடுகள் விசாரிக்க வேண்டுமென கூறினார். இந்த பிரச்சினையை மீண்டும் மனித உரிமைகள் கவுன்ஸிலிற்கு கொண்டு செல்ல நாம் முயற்சிக்க வேண்டும். இலங்கையின் நடத்தையை மனித உரிமை கவுன்ஸில் வெட்கப்படும்படியாக பாரட்டியதுடன் சர்வதேச விசாரணையையும் மறுத்தது. சீனா, ரஷ்யா, மற்றும் இந்தியா உட்பட நிரந்தர உறுப்புரிமை இல்லாத நாடுகள் காரணமாக இதை பாதுகாப்பு சபை வழியாக கையாள்வது கடினமானது. அரபு நாடுகளில் உண்டான புதிய நிலைமை காரணமாக மீண்டும் நாம் முயன்று பார்க்கலாம் என நான் எண்ணுகிறேன். புதிய உலக நிலைமையில் ஐ.நா. விசாரணைக்கு கூடுதல் ஆதரவு கிடைக்குமா என நாம் பார்க்க வேண்டும் என மைக் கேப்ஸ் கூறினார். சர்வதேச சமுதாயத்தின் அல்லது தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகாத உள்நாட்டு விசாரணைகளை மேற்கொள்வதால் உரிய நல்லிணக்கம் உருவாகாது என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டம் என அவர் கூறினார். மக்கள் இப்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தீவின் வடபகுதியின் சனத்தொகை அமைப்பை மாற்றும் முயற்சி மற்றும் குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. இலங்கையில் தனிநபர் மனித உரிமை மீறல்கள்பற்றி கடுமையான விசனம் உள்ளது. அரசாங்கம் சகல அதிகாரங்களையும் கொண்டுள்ளது. அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு பெரும் அதிகாரத்தை வழங்கியுள்ளது. தமிழ் தரப்பு மட்டுமன்றி சகல எதிர்ப்பாளர்களும் பல வகையில் மிரட்டப்படுகின்றனர் என கேப்ஸ் கூறினார். தமக்கு சர்வதேச ஆதரவும், தோழமையும் அவசியம் என்றும் இதனால் பிரித்தானிய அரசாங்கம் உரத்து, தெளிவாக, முரண்பாடு இல்லாத வகையில் பல அரங்குகளில் - அதாவது ஐ.நா, மனித உரிமைகள் கவுன்ஸில், பொதுநலவாயம் ஆகியவற்றில் இப்பிரச்சினையை தொடர்ந்து எழுப்ப வேண்டுமென அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’