வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 29 பிப்ரவரி, 2012

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தீர்மானித்தால் அமெரிக்காவுக்கு அறிவிக்கப்படமாட்டாது'


ரானிய அணுநிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தத் தீர்மானித்தால் அதுகுறித்து அமெரிக்காவுக்கு இஸ்ரேல் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கமாட்டாது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க, இஸ்ரேலிய உயர்மட்ட கலந்துரையாடலின்போது இஸ்ரேலிய அதிகாரிகள் இதை தெரிவித்தாக அமெரிக்க புலனாய்வு அதிகாரியொருவர் கூறியுள்ளார். இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்கா தடுக்கத் தவறிவிட்டதென பொறுப்புக்கூறப்படுவதை தணிப்பதற்காக அமெரிக்காவுக்காவுக்கு இத்தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்பட மாட்டாது என இஸ்ரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதால் ஈரானிய அணுசக்தி திட்டங்களுக்கு தற்காலிக பின்னடைவு மாத்திரமே ஏற்படும் என இஸ்ரேலை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு அமெரிக்கா பல மாதங்களாக முயற்சித்துவருகிறது. அமெரிக்காவின் கூட்டு படையதிகாரிகளின் பிரதானிகளின் தலைவர், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், தேசிய புலனாய்வு பணிப்பாளர், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் உயர் அதிகாரிகளிடம் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவும் பாதுகாப்பு அமைச்சர் எஹுட் பராக்கும் இந்த தகவலை தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு அடுத்தவாரம் வாஷிங்டனுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’