மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மூன்றாவது தடவையாகவும் ஆளுநராக பதவியேற்றுள்ளார். 80 வயதான இவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதன்கிழமை அலரி மாளிகையில் வைத்து சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
ஆறாவது மேல் மாகாண ஆளுநரான இவர் 2002ஆம் ஆண்டு முதல் மேல் மாகாண ஆளுநராக அலவி மௌலான செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த தலைவரும் தொழிற் சங்கவாதியுமான அலவி மௌலானா, கொழும்பு மாநகர சபை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், பிரதி அமைச்சர் மற்றும் அமைச்சர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார். (படங்கள்:சுதத் சில்வா)


0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’