பொ ருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்களாக தம்மை காட்டிக்கொண்டு, உடுருவ தெற்கு கிராமவாசிகளுக்கு அரச வங்கிகளிலும் சுங்கத் திணைக்களத்திலும் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த இருவரை கல்கிரியாகமவில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்விருவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்களில் அப்பகுதிக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தொழில்பெற்றுத் தருவதற்காக அவர்கள் பணமும் கோரியுள்ளனர். பொருளாதார அபிவிருத்தி அமைச்சிலிருந்து வருவதாக கூறிக்கொண்ட அவர்கள், அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கான ஏற்பாடுகளுக்காக அப்பகுதிக்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் அதை உறுதிப்படுத்துவதற்கு அவர்களிடம் ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். கெக்கிராவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இச்சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’