ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொள்வது குறித்து உத்தியோகபூர்வமான தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் இன்று வீரகேசரிக்கு தெரிவித்தார்.
ஜெனிவாவில் எதிர்வரும் 27ஆம் திகதி ஐ.நா.வின் 19ஆவது மனித உரிமைகள் பேரவை மா நாடு இடம்பெறவுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பது குறித்து இறுதித் தீர்மானம் எதனையும் இதுவரையில் எடுக்கவில்லை. சமகால அரசியல் நகர்வுகள் குறித்து கூட்டமைப்பு மிகத் தீவிரமாக அவதானித்து வருவதாகவும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’