வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 12 ஜனவரி, 2012

யாழ் பல்கலைக்கழகத் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடல்

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்த உயர்கல்வியமைச்சர் எஸ்.பி திசாநாயக்க யாழ்.பல்கலைக் கழக சமூகத்தின் தேவைகள் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கைலாசபதி கலையரங்கில் பல்கலைக் கழகத்தின் துறைசார்ந்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருடனான கலந்துரையாடல் இன்றைய தினம்(11) துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்றது. இதன்போது ஒவ்வொரு பீடங்களினதும் துறைகளினதும் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சர் கேட்டறிந்து கொண்டனர். விடுதி மாணவர்கள் எதிர்நோக்கி வரும் இடர்பாடுகள் தொடர்பாகவும் அவற்றுக்கு தீர்வு காண்பதற்கும் உயர்கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கினார். முன்பதாக பல்கலைக் கழக வளாகத்திலுள்ள சிறி பார்வதி பரமேஸ்வரன் ஆலயத்தில் சிறப்புப் பூசை வழிபாடுகளில் அமைச்சர்கள் உள்ளடங்கிய துறைசார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து பல்கலைக் கழக சிற்றுண்டிச்சாலை மலசல கூடங்கள் கற்றல் மண்டபம் மற்றும் வளாகத்தையும் பார்வையிட்டனர். இதன் போது துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் கல்வியமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.













0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’