இ லங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உதவுவதற்காக சுற்றுலா பொலிஸ் அலகுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மனித்துள்ளது. இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றுலா வலயங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களில் பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சளார் அஜித் ரோஹன கூறினார். இப்பொலிஸார் சீருடைகளில் மாத்திரம் அல்லாமல் சிவில் உடையிலும் காணப்படுவார்ளக் என அவர் கூறினார். பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எவரும் முறையற்ற விதமாக நடந்துகொண்டால் சட்டத்திற்கிணங்க கடும் நடவடிக்கை மேற்காள்ளப்படும் என அவர் கூறினார். இலங்கையில் விடுமுறையை கழிப்பதற்காக வந்திருந்த ஜனவரி 6 ஆம் திகதி அவஸ்திரேலிய பிரஜையான டொமி வைட் என்பவர் கந்தளாய் - கொழும்பு வீதியில் பொலிஸ் உத்தயோகஸ்தர் ஒருவரால் நிறுத்தப்பட்டார். வேகமாக வாகனம் செலுத்தியமைக்காக அப்பொலிஸ் உத்தியோகஸ்தர் தன்னிடம் 1000 ரூபா வசூலித்ததாகவும் காரை நிறுத்தாமல் சென்றதற்காக மற்றொரு 1000 ரூபாவும் நேரத்தை வீணாக்கியதற்காக 2 ரூபாவும் வசூலித்ததாக டொமி வைட் குற்றம் சுமத்தினார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோணுக்கும் இலஙi;க சுற்றுலா சபைத் தலைவருக்கும் டொமி வைட் எழுத்துமூலம் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’