வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 30 ஜனவரி, 2012

'ஐ.எம்.எவ். கடனின் கடைசி கொடுப்பனவை இலங்கை பெற்றுக்கொள்ளாது'


நாணயமாற்று வீத கொள்கை தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடன் (ஜ.எம்.எவ்) முரண்பாடுகளை கொண்டிருக்கும் இலங்கை, சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்த 2.6 மில்லியன் கடனின் கடைசி கொடுப்பவாக 800 மில்லியன் டொலரை பெற்றுக்கொள்ள மாட்டாது என மத்திய வங்கி ஆளுநர் திங்கட்கிழமை கூறினார். இந்த கடனுக்கு உயர் வட்டிவீதம் அறவிடப்படுவதே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறினார்.
நெகிழும் நாணயமாற்று வீத முறையை கடைப்பிடிக்க மத்திய வங்கி தவறிய பின் செப்டெம்பரில் விடுவிக்கப்பட வேண்டிய எட்டாவது தவனை கொடுப்பனவை சர்வதேச நாணய நிதியம் நிறுத்தி வைத்திருந்தது. 'நாம் மேலும் கடன்படாது இருப்பின் இதுவரை பெற்ற கடனுக்கு 1.1 சதவீத வட்டி கொடுத்தால் போதுமானதாக இருக்கும். அங்கீகரிக்கப்பட்ட முழு கடனான 2.6 மில்லியன் ரூபாவையும் நாம் பெற்றுக்கொண்டால் 3.1 சதவீத வட்டியை கொடுக்க வேண்டும்' என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறினார். இலங்கை ரூபாவின் பெறுமதியை தக்க வைப்பதற்காக இலங்கை தன் வெளிநாட்டு கையிருப்பை செலவளித்து வந்தது. இதனை சர்வதேச நாணய நிதியம் விரும்பவில்லை. சர்வதேச நாணய நிதியம் இலங்கைப் பற்றி பாதகமான கருத்தை வெளியிடுமாயின் அது இலங்கையின் கடன்பெறும் ஆற்றலை பாதிக்கும் என பொருளிலாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’