யா ழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் இன்னமும் மீள் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படாத பகுதிகள் மீள்குடியேற்றப்படாத மக்கள் தொடர்பான விபரங்களை ஆராய்தல் இதுவரையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் அரச மற்றும் பொது காணிகள் தொடர்பாக ஆராய்தல் நன்னீர் மீன் வளர்ப்புத் திட்டம் கடற்தொழில் சார்ந்த பிரச்சினைகள் மீள்குடியேறியுள்ள கடற்தொழில் சார்ந்த குடும்பங்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கப்படாமை போன்ற விடயங்கள் தொடர்பில் உயர்மட்ட மாநாடொன்று இன்றைய தினம் காலை யாழ் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது தலைமையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களும் உடனிருந்தார். துறைசார்ந்த அதிகாரிகளால் பல்வேறு திட்டங்களின் முன்னெடுப்புக்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனிடையே பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் ஆயிரம் கோடி ரூபாவில் மேற்கொள்ளப்படவிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் பிரகாரம் இத்திட்டத்தின் கீழ் கிராமிய வீதிகள் புனரமைப்பு சிறிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்கள் கிராமிய குடிநீர் வழங்கல் பாடசாலை மற்றும் பொதுக் கட்டிடங்கள் புனரமைப்பு பொதுச் சந்தை கிராமிய சுகாதார நிலையங்கள் வைத்தியசாலைகள் உரக் களஞ்சியம் நெற்களஞ்சியம் தபாற்கந்தோர் அலுவலகங்கள் போன்றவற்றின் கட்டிடங்கள் புனரமைப்பு நிர்வாகக் கட்டிடங்கள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டிடங்கள் விதைக் களஞ்சியம் நிர்வாக அலுவலக உத்தியோகத்தர்களுக்கான கட்டிடங்கள் புனரமைப்பு வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் மலசல கூடங்கள் புனரமைப்பு உட்பட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நிலையில் மீள்குடியேற்ற பகுதிகள் பொது மற்றும் அரச காணிகள் அடங்கிய பகுதிகள் நன்னீர் மீன்பிடிப்பதற்கு உகந்த பகுதிகள் இறால் மற்றும் நண்டு வளர்ப்பிற்கு உகந்த பகுதிகள் என்பவற்றை அவ்வப் பிரதேச வரைபடங்களில் குறித்து சமர்ப்பிக்கும்படி அமைச்சர் அவர்கள் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கினார். இம் மாநாட்டில் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) யாழ் அரச அதிபர் யாழ் மாநகர முதல்வர் வாழ்நாள் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’