தமிழ் மக்களின் சிறந்த நேர்மையான தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விளங்கி வருவதுடன் வடபகுதியின் அபிவிருத்தி மற்றும் மேம்பாட்டு திட்டங்களையும் துறைசார்ந்தோர் ஊடாக சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார் என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் புகழாராம் சூட்டியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
மன்னாரில் இன்றைய தினம் இடம்பெற்ற குடும்பப் பொருளாதார மற்றும் போசனை விருத்திக்காக 25 இலட்சம் மனைப் பொருளாதார அலகுகளை அபிவிருத்தி செய்வதற்கான வாழ்வெழுச்சி தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் மேன்மைதங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இந்நாட்டில் நிலவிய கொடிய யுத்தத்திற்கு முடிவு கட்டி ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்தித் தந்தது மட்டுமல்லாமல் இன மத மொழி என்ற எவ்விதமான பாகுபாடும் இன்றி மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்து வருகின்றார். இந்த நிலையில் கிடைக்கப் பெற்றுள்ள சமாதான சூழலை இல்லாதொழிக்க வேண்டுமென்பதில் சிலர் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர் என்றும் இவ்வாறான திட்டங்களுக்கு மக்கள் ஒருபோதும் எடுபட்டு விடக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களும் இணைந்து வடமாகாணத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து மக்களது பொருளாதார மேம்பாட்டுக்காகவும் அயராது உழைத்து வருகின்றார்கள். பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது வேண்டுகோளின் பேரில் பூநகரி சங்குப்பிட்டிப் பாலம் நவீன முறையில் புனரமைக்கப்பட்டதையும் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் இதன் போது அவர் நினைவு கூர்ந்தார். இன்றுள்ள சூழலில் தமிழ் மக்களின் சிறந்த நேர்மையான தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விளங்கி வருகின்றார் என்பதுடன் அவர் நீண்டகாலமாக கூறி வருகின்ற இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் 13வது அரசியல் அமைப்புக்கு அப்பால் சென்று தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை அப்போது மறுத்திருந்த அரசியல் வாதிகள் இப்போது அதனை ஏற்றுக் கொண்டு அதன் அடிப்படையில் பேசுவதற்கு தயார் என அறிவிக்கின்றார்கள். இதிலிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது நீண்டகால அரசியல் அனுபவம் புலப்படுவதுடன், அவரே தமிழ் மக்களது சிறந்த தலைவர் என்பதையும் எடுத்துக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். வடமாகாணத்தில் யுத்தத்தால் குடும்பத் தலைவர்களை இழந்து பல்வேறு இழப்புக்களைச் சந்தித்து நிர்க்கதியாகியுள்ள குடும்பங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே வாழ்வெழுச்சி திட்டத்தின் நோக்கமென்றும் தெரிவித்தார். மன்னார் சென்சேவியர் கல்லூரியில் மாவட்ட அரச அதிபர் சரத் ரவீந்திர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி திவிநெகும தொடர்பான விளக்கவுரை நிகழ்த்தியதைத் தொடர்ந்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் உரைநிகழ்த்தினர். இங்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் உரையாற்றும் போது இந்நாட்டை ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாடாக மாற்ற வேண்டுமென்பதிலும் ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும் வாழ்வெழுச்சித் திட்டம் ஊடாக வீட்டுத்தோட்டம் கால்நடைவளர்ப்பு மற்றும் சிறிய நடுத்தர பாரிய தொழிற்பேட்டைகளை நிறுவி அவற்றினூடாக சிறந்த பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி அவர்கள் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றார். செழிப்பான இல்லம் வளமான தாய்நாடு என்னும் வாழ்வெழுச்சி திட்டத்திற்காக நாடளாவிய ரீதியில் 25 இலட்சம் மக்கள் உள்வாங்கப்படவுள்ளனர். மன்னார் மாவட்டம் தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள நிலையில் அவை நிச்சயம் கவனத்தில் எடுக்கப்படுமென்பதுடன் இம்மாவட்டம் பல்துறைசார்ந்த மாவட்டமாக விளங்கி வருவதுடன் புள்ளி விபரங்கள் அடிப்படையில் வன்னி மாவட்டத்தில் தான் மிகக் குறைந்தளவு வறுமைநிலை மக்கள் உள்ளதாகவும் எதிர்காலத்தில் இத்தொகையும் இல்லாமல் போகும் நிலை உருவாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். சமாதானத்திற்கு சமாந்தரமாக நாட்டின் அபிவிருத்தியை ஜனாதிபதி முன்னெடுத்து வரும் நிலையில் அதற்காக பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றார் எனவும் அமைச்சரவையில் மாற்றம் என்றும் இன்னும் பல்வேறு பொய்யான கருத்துக்களையும் சில அரசியல் வாதிகள் கூறிவருகின்ற நிலையில் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். இதனிடையே இந்நாட்டில் வாழும் சகல மக்களும் இனம் மதம் மொழி என்ற வேறுபாடுகளின்றி ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் வாழும் போது அபிவிருத்தி மேம்பாட்டை விரைவாக முன்னெடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். நிகழ்வில் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் நினைவுப் பரிசிசை வழங்கி கௌரவித்தார். இதன்போது சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உணேஸ் பாரூக் அமைச்சு;ககளினதும் அரச திணைக்களங்களினதும் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதனிடையே மன்னார் சென் சேவியர் கல்லூரி மைதானத்தில் காட்சிப்படுத்தபப்ட்டிருந்த 300 வரையான பல்வேறு துறைகளினதும் காட்சிக் கூடங்களும் விற்பனைக் கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை அமைச்சர்கள் உள்ளடங்கி குழுவினர் பார்வையிட்டதுடன் அது தொடர்பிலும் துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்டனர். இக்கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’