வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 6 ஜனவரி, 2012

அமெரிக்க தூதரக பிரிவுகளிடம் இணையம் மூலம் கேள்விகள் கேட்கும் வாய்ப்பு


இலங்கை மற்றும் மாலைதீவு மக்களுடன் தொடர்புகளை வளர்ப்பதற்காக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் "தூதுரகத்தின் உள்ளே" எனும் இணைய வழி நிகழ்ச்சியொன்றினை ஆரம்பித்துள்ளது.

இதனூடாக ஒவ்வொரு மாதமும் அமெரிக்க தூதுரகத்தின் பல்வேறு பிரிவுகளுடனும் பேஸ்புக் ஊடாக தொடர்பு கொண்டு கேள்விகளை கேட்டு விளக்கங்களை பெற்றுக்கொள்வதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, முதலாவதாக இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் பற்ரீசியா  பேஸ்புக் ஊடாக வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா, தூதரக வெளிநாட்டு தொடர்பு, ஆங்கில பயிற்சி மற்றும் உயர் கல்வி உள்ளிட்ட ஐந்து கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

இதனடிப்படையில் ஒவ்வொரு மாதத்திலும் தூதரகத்திலுள்ள வௌ;வெறு பிரிவுகள் தொடர்பாக கேள்விகளை கேட்க முடியும். ஜனவரி மாதத்தில் கொன்ஸுயூலர் (விஸா) பிரிவினரிடம் கேள்விகளை கேட்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களை http://www.facebook.com/usembassycolombosl என்ற இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’