த மிழ் நாட்டில் தான் கல்வி பயின்றாலும் தனது கணித பாட ஆசிரியர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் என இந்தியாவின் மன்னாள் ஸனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமோக மாணவர்களின் வரவேற்புக்கு மத்தியில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் புகழ்மிக்க அணு விஞ்ஞானானியுமான அப்துல் கலாம் விசேட உரையாற்றியுள்ளார் 1941ஆம் ஆண்டு காலப் பகுதியில் ராமேஸ்வரத்தில் தான் கல்வியைத் தொடர்ந்த போது கனகசுந்தரநாத் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியரே தனக்கு இலவசமாக கணித பாடத்தை கற்பித்தார். அத்துடன் அவரிடமிருந்து நான் நல்ல பழக்கவழங்களையும் தான் கற்றுக்கொண்டேன்’ எனவும் மேலும் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரச ரெட்ணம், இந்திய உயர்ஸ்தானிகர் அசோக கே. காந், யாழ்.இந்தியத் தூதுவ அதிகாரி எஸ்.மகாலிங்கம் அமைச்சரான் திஸ்ஸ விதானகே மற்றும் உயர் அதிகாரிகள் , போராசிரியர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’