மு ப்பது வருட யுத்தத்தில் அழிந்து போன கிழக்கு மண்ணை ஒரேநாளில்கட்டியெழுப்பிவிட முடியாது. அதற்கு நீண்ட காலம் தேவைப்படும். ஆனாலும் எமது ஜனாதிபதி எமது மண்ணைக்கட்டியெழுப்புவதில் மிகத் தீவிரமான அக்கறை செலுத்திவருகிறார் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பார்வையற்றோர் நிலையத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். யுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களினால் பார்வையிழந்தோரின் தேவைகள் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’