வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 4 ஜனவரி, 2012

ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் பிரித்தானிய குழுவினர் கிளிநொச்சியின் அபிவிருத்திப் பணிகளை பார்வையிட்டனர்!


கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானியாவின் ஸ்ரொக்டன் சவுத் பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோட்டன் ஜரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சின் அரசியல் விவகாரப் பணிப்பாளர் மக்ஸ்வெல் கீகெல் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கிறிஸ் நொநிஸ் மற்றும் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதிதலைவருமான மு.சந்திரகுமார் உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளை இன்று (4) பார்வையிட்டனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இதன்போது மீள்குடியேற்றத்தின் பின் மக்களின் வாழ்வாதார நிலைமைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் இன்னும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 18901 புதிய வீடுகளும் 6060 புனரமைக்கப்பட வேண்டிய வீடுகளும் உள்ளிட்ட மலசல கூடங்கள் மக்களுக்கு தேவையாக உள்ளது எனவும் அதற்கு பிரித்தானிய அரசு உதவவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்;தார். இந்நிலைமைகளை கேட்டுக்கொண்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர் இவ்விடயம் குறித்து தாங்கள் கவனத்தில் எடுப்பதாக தெரிவித்துள்ளனர். இவ்விஜயத்தின் போது கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் கரைச்சி பிரதேச செயலர் நாகேஸ்வரன் திட்டப்பணிப்பாளர் மோகனபவன் ஆகியோர் உடனிருந்தனர்








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’