மு ம்மொழிக் கொள்கை அமுல்படுத்தப்படுவதால் அடுத்த 15 வருடங்களில் இலங்கையில் பாரிய மாற்றம் ஏற்படும் என இலங்கை வந்துள்ள அணு விஞ்ஞானியும் இந்திய முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர் அப்துல் கலாம் தெரிவித்தார்.
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இலங்கைக்கான ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதி நாளான இன்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த டாக்டர் அப்துல் கலாம், "மும்மொழிக் கொள்கை அமுல்படுத்தப்பட்டமையால் இலங்கையிலுள்ள மக்கள் அனைவரும் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் தெரிந்தவர்களாக காணப்படுவர். இதற்கு மேலதிகமாக ஆங்கில மொழியிலும் அவர்களால் உரையாற்ற முடியும். இதனூடாக மக்கள் மத்தியில் ஒர் ஒற்றுமை ஏற்படும். மும்மொழிக் கொள்கை தொடர்பான பாடத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தல், பாடசாலைகளில் எவ்வாறு மும்மொழி கொள்கையினை அமுல்படுத்தப்படல் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சு நடத்தினேன். அத்துடன் 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் அதிகார வலுவூட்டல் தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடினேன்' என்று டாக்டர் அப்துல் கலாம் மேலும் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’